Breaking News

வராகி தீபம் ஏற்றுவதன் பயன்கள் மற்றும் செய்முறை -வராகி வசியம் _Spiritual World

வராகி தீபம் ஏற்றுவதன் பயன்கள் மற்றும் செய்முறை -வராகி வசியம் _Spiritual World

ஏவல் பில்லி சூன்யத்தால் இழந்த பணம் ...

வராகி தீபம் ஏற்றுவதன் பயன்கள் மற்றும் செய்முறை -வராகி வசியம் _Spiritual World

" வராகி தீபம்"

நாட்டு மருந்து கடையில் லிங்கம் என்று கேட்டால் கிடைக்கும்.இதனை 100 கிராம் ஒரே கட்டியாக வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சிறிய மண் சட்டியில் லிங்க கட்டியை வைத்து அது முங்க வெள்ளாட்டுப்பால் விட்டு 3 நாள் ஊறவைக்கவும்.தினசரி பழைய பாலை மாற்றி விட்டு புதுப்பால் விட்டு ஊறவைக்க வேண்டும். அதன் பின் குப்பைமேனி சார் 100 மில்லி பசும்பால் 100 மில்லி எலுமிச்சம் பழச்சார்100 மில்லி கலந்து வைத்து கொண்டு அதனை மண் சட்டியில் விட்டு அதனுள் மேற்படி லிங்க கட்டியை போட்டு அடுப்பில் வைத்து மேற்படி சாறுகள் சுண்டும் படி எரித்து எடுத்து துடைத்து வைத்துக் கொள்ளவும்.

பின் அந்த மண் சட்டியை கழுவி துடைத்து விட்டு அதில் மேற்படி லிங்க கட்டியை வைத்து அதில் 200 கிராம் தேன் ஊற்றவும் அத்துடன் 500 மில்லி வராக நெய் (பன்றி நெய் ) விட்டு அடுப்பில் வைத்து எரிக்கவும். அவ்வாறு எரிக்கும் போது சிறிது நேரத்தில் சட்டியினுள் உள்ள மருந்தில் நெய்யில் தீப்பிடிக்கும்.அவ்வாறு தீப்பிடித்ததும் சட்டியை இறக்கி வைக்கவும்.

இதனை செய்யும் போது கீழே போட்டு உடைந்து விட்டால் தரையில் நெய் சிந்திய இடத்தில் எல்லாம் தீப்பிடித்து எரிய ஆரம்பிக்கும். வீட்டினுள் வைத்து இவ்வாறு நிகழ்ந்தால் வீட்டில் உள்ள துணி மணிகள் தீப்பிடிக்க ஏதுவாகிவிடும். குழந்தைகள் அருகில் இல்லாமல் மிகவும் ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்.எரியும் சட்டியை இறக்க இடுக்கி போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்கவும். எனவே இதனை தோட்டத்ததில் மண் தரையில் வைத்து செய்வதே சிறப்பு .

ஒரு வேளை நெய் கீழே சிந்தி மண்ணில் தீப்பிடித்தாலும் மேலும் மண்ணைப் போட்டு அணைக்கவோ தண்ணீர் விட்டு அணைக்கவோ வசதியாக இருக்கும்.எப்போதுமே அடுப்பில் வேலை செய்யும்போது அருகில் தண்ணீர் தயாராக வைத்திருக்கவேண்டும். இதனை ஏன் இவ்வாறு தெளிவாக சொல்லுகிறேன் என்றால் நமது பயற்ச்சி மாணவர் ஒருவர் வீட்டினுள் வைத்து செய்து வீட்டினுள் தீ பரவி பயந்து போய் விட்டார். நல்ல வேளை எதுவும் இல்லாது போயிற்று.
பின் இடுக்கியால் லிங்கக் கட்டியை எடுத்து துடைத்து விட்டு அதே மண் சட்டியில் உள்ளே உள்ளவற்றை துடைத்து விட்டு அதில் லிங்க கட்டியை வைத்து ஒரு லிட்டர் பசும்பால் விட்டு கொதிக்க வைக்கவும். பால் சுண்டியதும் கட்டியை எடுத்து துடைத்து விட்டு பின் கட்டியை குழி அம்மியில் வைத்து சுமார் இரண்டரை மணி நேரம் நன்றாக அரைத்து பவுடராக்கி வைத்துக் கொள்ளவும். இதனை மருந்தாக உள்ளே கொடுப்பதானால் மிக நன்றாக அரைக்க வேண்டும். இது லிங்க கட்டு எனப்படும். இதனை காலை மாலை 100 முதல் 200 மி.கிராம் அளவில் தேனில் சாப்பிட்டு வர சுரம் சன்னி உடனே தீரும். 15 .20 நாட்கள் கொடுக்கலாம் ஆண்மை விருத்தி, குழந்தை பிறக்க,கனவன் மனைவி உடல் உறவில் பிறச்சனை, நரம்பு தளற்ச்சி,உடல் பலவீனமும் குணாகும்.

இதனை நெற்றியில் குங்குமம் போல் அணிந்து வந்தால் மற்றவர்கள் செய்யும் எந்த வசியமும் மந்திரமும் தந்திரஜால பேச்சிகளும் நம்மிடம் எடுபடாது. தொடர்ந்து அணிந்து வர பில்லி சூனியம் பேய் பிசாசு கோட்டி மந்த புத்தி யாவும் தீரும். 

இந்த பொடியில் பசுநெய் விட்டு அரைத்துக் கொள்ளவும்.குழம்பாக இருக்கும். பஞ்சில் திரி திரித்து அந்த திரியில் மேற்படி அரைத்ததை தடவினால் சிவப்பு கலர் திரியாக இருக்கும். இதுவே வராகிதீப திரியாகும்.

வியாபார ஸ்தலத்தில் ஒரு ஓரத்தில் சிறிய மண் விளக்கில் விளக்கெண்ணை விட்டு அதில் இந்த திரியை போட்டு தீபம் ஏற்ற அந்த இடத்தில் உள்ள கொளாறுகள் யாவும் நீங்கி வியாபாரம் நன்றாக நடக்கும்.திருஷ்டிகள் அடிபட்டு போகும். ஏவல் பில்லி சூனியம் எதுவும் எடுபடாது. வீட்டில் இதனை எரியவிட வீடு ராசியாகும். வீட்டில் உள்ள கொளாறுகள் அணைத்தும் நீங்கிவிடும். ஏவல் பில்லி சூனியங்கள் விலகிவிடும்.காத்து கருப்பு எதுவும் அண்டாது

ஒரு வீட்டில் ஏவலால் கல் விழுந்து கொண்டு இருந்தது. இந்த தீபம் போட்ட நாள் முதல் கல் விழவில்லை.

திருமணம் ஆகாமல் தாமதமாகி வருபவர்களுக்கு திருமணம் நடந்து விடுகிறது. கெட்ட சொப்பனம் வாஸ்து கோளாறுகள் உள்ள வீடுகள் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது.

இந்த திரி என்னிடம் வாங்கி உபயோகித்தவர்கள் அணைவரும் நன்றாக முன்னேறி உள்ளனர்.

நமது ஆலயத்தில் 30 திரிகள் ரூபாய் 700 க்கு வழங்கி வருகிறோம்.நம்மிடம் வாங்கி விற்பவர்கள் நிறைய உள்ளனர். மிக அற்புதமான முறை. செய்து பயன் அடையுங்கங்கள்.